‘பேட்ட’ வரிசையில் வெளியாகும் ‘தர்பார்’

ரஜினியின் ‘தர்பார்’ ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது!

செய்திகள் 30-Dec-2019 1:27 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸும், ரஜினியும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘தர்பார்’. ரஜினியின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் ‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இப்படத்தின் பீரிமியர் ஷோ அமெரிக்காவில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘தர்பார்’ படத்திற்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியானது. ‘பேட்ட’ கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியானது. இப்போது அதே வியாழக் கிழமை சென்டிமெண்ட்டில் ரஜினியின் ‘தர்பார்’ படமும் ஜனவரி 9-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியாக இருக்கிறது. ஆனால், இப்படத்தின் சென்சார் காட்சி மற்றும் சென்சார் சர்டிஃபிக்கெட் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை! அந்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#Darbar #LycaProductions #Rajinikanth #Nayanthara #YogiBabu #Anirudh #ARMurugadoss #DarbarFromPongal2020 #SantoshSivan #SreekarPrasad #ChummaKizhi #DarbarOnJan9th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;