‘ஒத்த செருப்’பை தொடர்ந்து பார்த்திபனின் மற்றொரு புதிய முயற்சி!

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் படம்  ‘இரவின் நிழல்’

செய்திகள் 2-Jan-2020 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கி, தயாரித்து சமீபத்தில் வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’. பாராட்டுக்களும் ,பல்வேறு விருதுகளும் கிடைத்து பேசப்பட்ட இந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் மற்றொரு புதிய முயற்சியாக ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து நடிக்க இருக்கிறார். பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த ‘ஒத்த செருப்பு’ படத்தைப் போலவே இப்படமும் வித்தியாசமான முறையில் உருவாக இருக்கிறது. அதாவது இந்த படத்தை ஒரே டேக்கில் எடுக்க இருக்கிறார் பார்த்திபன். ‘ASIA’S FIRST SINGLE SHOT FEATURE FILM’ இதுதான் என்ற அறிவிப்போடு இப்படம் குறித்த தகவலை பார்த்திபன் சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார். ஆரம்பகட்ட வேலையில் இருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகாக நாம் காத்திருப்போம். #RParthipen #OththaSeruppuSize7 #IravinNizhal #AsiasFirstSingleShotFeatureFilm

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;