சிம்புவின் ‘மாநாடு’ முக்கிய அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது!

செய்திகள் 2-Jan-2020 11:18 AM IST Top 10 கருத்துக்கள்

சில மாதங்களுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் ந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டு ‘மாநாடு’ படத்தை துவங்குவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். இதனை தொடந்து இப்போது படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வெலைகள் நடந்து வர, ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்று எதிர்பர்த்து காத்துக்கொண்டிருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக படம் குறித்த புதிய தகவல் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பொங்கலுக்கு ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள், படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுடப் கலைஞர்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு சிம்புவின் புத்தாண்டு ‘ட்ரீட்’டாக அமைந்துள்ளது.

‘மாநாடு’ படத்தை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி, ‘யு-ட்யூப்’ திரை விமர்சகர் ‘புளூ சட்டை’ மாறன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Simbu #KalyaniPriyadarshan #VenkatPrabhu #STR #Maanadu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;