‘காக்க காக்க’, ‘திருட்டுப் பயலே’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஜீவன் அடுத்து நடிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. 6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது ‘வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன்’ என்ற நிறுவனம் சார்பாக இப்படட்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை வடிவுடையான் இயக்குகிறார். தொடர்ந்து ஹாரர் ரக படங்களை இயக்கி வரும் வடிவுடையான் இப்படத்தையும் ஹாரர் படமாக இயக்குகிறார். ஜீவன் நடிக்கும் முதல் ஹாரர் படமும் இதுதான். இந்த படத்தில் ஜீவனுடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவடைந்ததும் அவர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இனியன் J.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறர். வசனங்களை பா.ராகவன் எழுதுகிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
#Jeevan #Pambattam #VaithiyanathanFilmGarden #Amresh #EnniyanJHarris #SureshUrs #PARaghavan
பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’, சிம்புவின் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில்...
சமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா!...
அறிமுக இயக்குனர் ஜி.கே.இயக்கத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்க, ’பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம்...