குசேலனாக ஜெயராம் நடிக்கும் படம்!

‘நமோ’ என்ற படத்தில் குசேலனாக நடிக்கும் ஜெயராம்!

செய்திகள் 4-Jan-2020 4:52 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் ஜெயராம், சமஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ‘நமோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஜீஷ் மணி என்பவர் இயக்குகிறார். ‘நமோ’ படத்தில் ஜெயராம் குசேலனாக நடிக்கிறார். இதற்காக ஜெயராம் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்து, மொட்டை அடித்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்து வருகிறர். கிருஷ்ணனுக்கும், குசேலனுக்கும் இடையில் உள்ள நட்பு பற்றி பேசும் படமாம் ‘நமோ’. இந்த படத்தின் படத்தொகுப்பை பல முறை தேசிய விருது பெற்ற பி. லெனின் கவனிக்கிறார். எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ஜெயராமுடன் மமா நயான், சர்கார் தேசாய், மைதிலி ஜாவேகர், ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

’நமோ’ படத்தை இயக்கி வரும் விஜீஷ் மணி, இதற்கு முன் ஸ்ரீநாராயண குரு பற்றி ‘விஷ்வகுரு’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் ‘இருள’ மொழியில் ‘நேதாஜி’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இதில் ‘விஷ்வகுரு’ படம் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த விஜீஷ் மணியின் ‘நேதாஜி’ படம் கின்னஸ் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நமோ படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

#Jayaram #JayaramAsKuselan #Namo #BLenin #Netaji #VishwaGuru #VijeeshMani #SanskritFilm

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - யவனா வீடியோ சாங்


;