‘அகரம்’ அறக்கட்டளை புத்தக வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய சூர்யா!

நேற்று சென்னையில் நடந்த   ‘அகரம்‘ அறக்கட்டளை’ புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு மாணவியின் பேச்சை கேட்டு  அழுத சூர்யா!

செய்திகள் 6-Jan-2020 12:45 PM IST Top 10 கருத்துக்கள்

சூர்யாவின் ‘அகரம அறக்கட்டளை’ நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். பேராசிரியர் ச.மாடசாமி எழுதிய ‘வித்தியாசமான அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ‘உலகம் பிறந்தது நமக்காக’ ஆகிய இரண்டு நூல்களை கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அமைச்சர் சேங்கோட்டையன் பேசும்போது,

‘‘இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்விக்காக தமிழக அரசு பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. கல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை நடிகர் சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’ மூலம அவர் செயல்படுத்தி வருவது அவரது மனிதநேயத்தை காட்டுகிறது’’ என்று பேசினார்.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா பேசும்பொது, ‘‘அகரம் பத்து ஆண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருக்கிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறாது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்த மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மையானது. இந்த புத்தகங்களை வெளியிடுவதில் அகரம் பெருமிதம் கொளிகிறது.

இன்றும் கிராமங்களின் எளிய மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை அரசுப் பள்ளிகளும், அதன் ஆசிரியர்களுமே. பன்னிரெண்டாவது வகுப்பு வரை தட்டு தடுமாறி படித்து விட்டு வெளியே வரும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் பெரிய இடைவெளி இருக்கிறது. பொருளாதார சமூக கரணங்களால் உயர் கல்வி பெற இயலாத நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதே அகரம் அறக்கட்டணையின் பணி’’ என்று பேசிய சூர்யா விழாவுக்கு வந்திருந்த ஒரு மாணவியின் பேச்சை கேட்டு கண்கலங்கி அழுதார். அகரம் அறக்கட்டளை உதவியுடன் படிக்கும் அந்த மாணவி கேன்சரால் இறந்து போன தன் அப்பா, கூலி வேலை செய்து தன்னை வளர்த்தும் படிக்க வைத்தும் வரும் தன் அம்மா படும் கஷ்டங்களை பற்றி மேடையில் பேச, அதை கேட்டு அழுதார் சூர்யா! அதனை தொடர்ந்து அந்த மாணவிக்கு சூர்யா ஆறுதல் கூறிய நிகழ்வு விழாவில் பங்குகொண்ட அனைவரையும் நெகிழ வைத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;