அஜித்தின் ‘வலிமை’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது!

செய்திகள் 6-Jan-2020 12:55 PM IST Top 10 கருத்துக்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘வலிமை’. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனிகபூரே இப்படத்தையும் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கி தொடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ‘வலிமை’ எப்போது ரிலீசாகும் என்ற தகவலை இப்படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ‘ஜீடிவி’ விருது வழங்கும் விழாவில கலந்துகொண்ட போனிகபூர் ‘வலிமை’ படம் குறித்து பேசும்போது, ‘வலிமை’ படத்தில் நிறைய எமோஷன் காட்சிகள் இருக்கிறது என்றும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும்’’ என்றும் பேசியுள்ளார். இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் ‘வலிமை’ ரிலீசாகி வலிமை காட்ட இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது! அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்க, நீர்வ ஷாவே இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர்!

#Thala #AK60 #BoneyKapoor #HVinoth #BayViewProjectsLLP #ZeeStudiosInternational #Thala60PoojaDay #Valimai #NirovShah #YuvanShankarRaja #AjithKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;