4 விருதுகளை அள்ளிய கார்த்தியின் ‘கைதி’

நான்கு ‘ ஜீ டிவி’ விருதுகளை அள்ளியது கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம்!

செய்திகள் 6-Jan-2020 3:56 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ‘ஜீ டிவி’யும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று குறிப்பிடத்தக்க ஒரு சேனலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ஜீ.டிவியும் தமிழில் வெளியாகும் சிறந்த படங்களை, சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவிக்க துவங்கியுள்ளது. அதன் துவக்கமாக சென்ற ஆண்டு (2019) வெளியான படங்களில் இருந்து சிறந்த படங்களை, சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுகு விழுது வழங்கும் விழா நேற்று முன் தினம சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடித்த ‘கைதி’ படம் நான்கு விருதுகளை அள்ளியது.

மக்களுக்கு விருப்பமான படம், சிறந்த பின்னணிப் பாடகர் (சித் ஸ்ரீராம் – பாடல் கண்ணாண கண்ணே), சிறந்த பாடலாசிரியர் (தாமரை- பாடல் - கண்ணான கண்ணே), மக்களுக்கு விருப்பமான பாடல் (கண்ணான கண்ணே…) மக்களுக்கு விருப்பமான இசை அமைப்பாளர் (டி.இமான்) என ஐந்து விருதுகள் கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க ,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘கைதி’ படத்திற்கு சிறந்த உறுதுணை நடிகர் விருது (ஜார்ஜ் மரியான்), மக்களுக்குப் பிடித்த இயக்குனர் (லோகேஷ் கனகராஜ்), சிறந்த வில்லன் நடிகர் ( அர்ஜுன் தாஸ்), சிறந்த சண்டை இயக்குனர் (அன்பறிவு) என நான்கு விருதுகள் கிடைத்தது.

இதுதவிர விருதுக்கு தேர்வானவர்களின் விவரம் வருமாறு…

இந்திய சினிமாவின் பெருமை : கமல்ஹாசன்

மிகச்சிறந்த நம்பிக்கையளிக்கும் நடிகர் : அஜித்

இந்திய இசையின் பெருமை : ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த படம் : பேரன்பு

சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (அசுரன்)

சிறந்த நடிகர் : தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா)

சமூக பொறுப்புள்ள நடிகர் : விஜய்சேதுபதி

மக்களுக்கு விருப்பமான நடிகை : நயன்தாரா (விஸ்வாசம், பிகில்)

இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது : நயன்தாரா

சிறந்த நடன இயக்குனர் : பிரபுதேவா ( மாரி-2)

சிறந்த காமெடி நடிகர் : யோகி பாபு (கோமாளி)

சிறந்த இசை அமைப்பாளர் : அனிருத் (பேட்ட)

சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்குமார் (அசுரன்)

சிறந்த ஒளிப்பதிவாளர் : விஜய் கார்த்திக் (ஆடை)

சிறந்த படத்தொகுப்பாளர் : சத்யராஜ் நடராஜன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த கலை இயக்குனர் : விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த அறிமுக இயக்குனர் : அருண்ராஜா காமராஜ் (கனா)

சிறந்த கதையாசிரியர் : ராம் (பேரன்பு)

சிறந்த திரைக்கதையாசிரியர் : பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ்-7)
சிறந்த அறிமுக நடிகர் – துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)

சிறந்த கண்டு பிடிப்பு : கென் கருணாஸ் (அசுரன்)

சிறந்த அறிமுக நடிகை : லிஜோ மோல் (சிவப்பு மஞ்சள் பச்சை)

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : அஸ்வத் (சூப்பர் டீலக்ஸ்), சாதனா (பேரன்பு)

சிறந்த நடிகை - நடுவர் தேர்வு : சமந்தா

சிறந்த ஆடை வடிவமைப்பாலர் : பெருமாள் செல்வம் (அசுரன்)

சிறந்த ஒப்பனை கலைஞர் : பானு (பேட்ட)

சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்ரேயா கோஷல் (பாடல் - அன்பே பேரன்பே… படம்- என்.ஜி.கே)

சிறந்த பின்னணிப் பாடகி - நடுவர் தேர்வு : பத்மப்ரியா (படம் –ஐரா, பாடல் -மேகதூதம்)

சிறந்த உறுதுணை நடிகைகள் : ரம்யா கிருஷ்ணன் (சூப்பர் டீலக்ஸ்), அஞ்சலி (பேரன்பு)

இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக கே.பாலச்சந்தர் விருது : கே ஷங்கர்!

நேற்று முன் தினம் (4-1-2020) மாலை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட்டது.

#ZeeTamilCineAwards #ZeeCineAwards #ZeeCineAwards2020 #ZeeTV #Zee #Kaithi #Viswasam #SuperDeluxe #Bigil #Peranbu #Asuran #Petta

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;