மணிரத்னம் படத்தின் முக்கிய தகவல்!

மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டீஸர் வருகிற 8-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 6-Jan-2020 6:28 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவரும் ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனசேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, இவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு உட்பட பலர் நடிக்கின்றனர். வானம் கொட்டட்டும் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் வருகிற 8-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை ப்ரீத்தா ஜெயராமன் கவனிக்க, ஆண்டனி படத்தொகுபு செய்து வருகிறார்.

#LycaProductions #MadrasTalkies #ManiRatnam #VaanamKottattum #VikramPrabhu #Dhana #AishwaryRajesh #MadonnaSebastian #SidSriram #RaadhikaaSarathKumar #SarathKumar #VaanamKottattumteaser #VaanamKottattumteaserFromOct8th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;