ஜீவாவின் ‘சீறு’ புதிய ரிலீஸ் தேதி!

ஜீவா நடிக்கும் ‘சீறு’ ஃபிப்ரவரி ஃபிப்ரவரி 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 7-Jan-2020 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

‘வா டீல்’, ‘றெக்க’ ஆகிய படங்களை தொடர்ந்து ரத்தின சிவா இயக்கியுள்ள படம் ‘ சீறு’. ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப், சதீஷ், வருண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ஐசரி கணேஷின் ‘வேல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ‘சீறு’ மாயவரம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் ரக படமாகும். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் அந்த தேதியில் ‘சீறு’ வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியாக ஃபிப்ரவரி-7 அறிவிக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்ன குமார் கவனித்துள்ளார். படத்தொகுப்பை கிஷோர் செய்துள்ளார்.


#Jiiva #Seeru #Navdeep #IshariKGanesh #VelsFilmInternational

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;