மிரட்ட வரும் ‘சைக்கோ’ டிரைலர்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்  ‘சைக்கோ’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது!

செய்திகள் 7-Jan-2020 11:36 AM IST Top 10 கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும் படம் ‘சைக்கோ’. ‘Double Meaning Productions’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை நாளை (8-1-2020) வெளியிட இருக்கிறார்கள். மிஷ்கின் இயக்கும் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்! அதிலும் ‘சைக்கோ’ என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இளையராஜா இசை அமைப்பில் வெளியாக இருக்கும் ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து மிஷ்கின் இப்போது இயக்கி வரும் படம் ‘துப்பறிவாளன்-2’. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
#Psycho #Myskkin #AditiRaoHydari #NithyaMenen #DirectorRam #DoubleMeaningProductions #Ilaiyaraaja #TanvirMir #PCSreeram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;