விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் கன்னடத்தில் சமீபத்தில் ரீ-மேக்காகி வெளியானது. இதனை தொடர்ந்து ‘96’ தெலுங்கு மொழியிலும் ரீ-மேக்காகி வருகிறது. தெலுங்கு ‘96’ ரீமேக்கை தமிழில் இயக்கிய பிரேம் குமாரே இயக்கி வருகிறார். தெலுங்கில் ‘ஜானு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தமிழில் விஜய்சேதுபதி நடித்திருந்த ராமச்சந்திரன் கேரக்டரில் ஷர்வானந்த் நடிக்க, தமிழில் த்ரிஷா நடித்திருந்த ஜானு கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். தமிழ் ‘96’-ல் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷனே தெலுங்கிலும் குட்டி ஜானுவாக நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘ஜானு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ‘ஜானு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருக்கும் கௌரி கிஷன் அந்த ஃப்ரஸ்ட் லுக்கை பகிர்ந்து, ‘மீண்டும் இளம் ஜானு கேரக்டரில் நடிப்பது அதிர்ஷ்டவசமானது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். கௌரி கிஷன் இப்போது விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டனியில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் ‘96’ படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தாவே தெலுங்கு ‘ஜானு’விற்கும் இசை அமைக்கிறார்.
#SamanthaAkkineni #Sharwanand #VijaySethupathi #Trisha #96 #Jaanu #JaanuFirstLook #ADilRajuProduction #GouriGKishan #GovindVasantha #CPremKumar #JMahendran #SriVenkateswaraCreations #SVC
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...