பொங்கல் ‘ட்ரீட்’டாக கார்த்தி படம்!

மாட்டுப் பொங்கலன்று (16-1-2020) விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது   கார்த்தியின் ‘கைதி’

செய்திகள் 7-Jan-2020 4:31 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகி இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் வெளியான இப்படம் ரசிகரக்ளிடம் நல்ல வரவேற்பு பெற்று பட்டித் தொட்டியெங்கும் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இதனை தொடர்ந்து ‘கைதி’ தியேட்டர்களில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்ததோடு, சமீபத்தில் ‘ஹாட்ஸ்டாரி’லும் இப்படம் வெளியாகி ரசிகரகளுக்கு விருந்து படைத்தது. இந்நிலையில் ‘கைதி’ படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியுள்ள விஜய் டி.வி.நிறுவம் இப்படத்தை பொங்கல் ட்ரீட்டாக மாட்டுப் பொங்கல் அன்று (16-1-2020) காலை 11 மணிக்கு திரையிட இருக்கிற தகவலை அதிகாரர்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தீபாவளியை தொடர்ந்து பொங்கலுக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது கார்த்தியின் ‘கைதி’.
#Kaithi #KaithiInStarVijayAt11AM #LokeshKanagaraj #StarVijayTV #Karthi #Narain #SamCS #SRPrabhu #SRPrakashBabu #DreamWarriorPictures #HotStar #VivekanandaPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;