7000 தியேட்டர்களில் வெளியாகும் ரஜினியின் ‘தர்பார்’

உலக அளவில்  7000 தியேட்டர்களில் வெளியாகும் ரஜினியின் ‘தர்பார்’

செய்திகள் 8-Jan-2020 3:13 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிக்கும் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகுவதும் வெளியாகுவதும் வழக்கம்! அந்த வரிசையில் நாளை (9-1-2020) உலகம் முக்க வெளியாக இருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் உட்பட பலர் நடித்திருக்க, இப்படத்தை சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 4000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலுமாக உலக அளவில் கிட்டத்தட்ட 7000 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது என்று ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்க்ள் நடிக்கும் படங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பும், வ்சூலும் இருந்து வருவதால் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அந்த படத்தை புரொமோட் செய்வதில் படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினியின் ‘தர்பார்’ படத்தையும் இந்திய மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல விதமாக புரொமோட் செய்துள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் ஒரு பாகமாக அமெரிக்காவில் இன்று ‘தர்பார்’ சிறப்பு காட்சியாக திரையிடப்பட இருக்கிறது.
#Darbar #Nayanthara #ARMurugadoss #LycaProductions #NivethaThomas #DarbarFromJan9th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;