வெளியானது, ‘அவதார்-2’வின் முன்னோட்டம்!

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும்  ‘அவதார்-2’ ப்டத்தின்  முனோட்டமாக 4 புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!

செய்திகள் 8-Jan-2020 3:41 PM IST VRC கருத்துக்கள்

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு உலகம் முழுக்க வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வசூல் குவித்த படம் ‘அவதார்’. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பலவேறு மொழிகளில் உலகம் முழுக்க வெளியான இப்படம், வியக்க வைக்கும் விதமான காட்சி அமைப்புகளுடன் மாறுபட்ட விதமாக உருவாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது.

இதனை தொடர்ந்து ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இப்போது ‘அவதார்-2’வை இயக்கி வருகிறார். இந்த இரண்டாம் பாகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இப்படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகங்களும் அடுத்தடுத்து உருவாகி வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்போது உருவாகி வரும் ‘அவதார்-2’ படம் சம்பந்தமாக ‘அவதார்’ படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நான்கு வண்ணமயமான புகைப்படங்களை வெளியிட்டு, ‘நீங்கள் பண்டோராவிற்கு மட்டும் போகப்போவதில்லை, நீங்கள் இன்னும் உலகத்தின் பல்வேறு புதிய பகுதிகளை பார்க்கப் போகிறீர்கள்’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்போது வெளியாகியுள்ள ‘அவதார்-2’ புகைப்படங்களையும் , தகவல்களையும் பார்க்கும்போது ‘அவதார்-2’ நம்மை எல்லாம் வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்! காத்திருப்போம் ’அவதார்-2’வின் அவதாரத்திற்கு!

#JamesCameron #Avatar #Avatar2 #ConceptArtImagesOfAvatar2 #DylanCole #Pandora #LightstormEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;