ரிலீஸ் தேதி குறித்த மணிரத்னம் படம்!

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்  நடிக்கும் வானம் கொட்டட்டும் ஃபிப்ரவரி 7-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 8-Jan-2020 7:21 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனசேகர்ன இப்படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க,இவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் புதிய டீஸர் சற்றுமுன் வெளியானது. சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் படம், மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், விக்ரம் பிரபுவுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் என்று பல்வேறு சிறப்புக்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவரும் விதமாக இருக்கிறது. இந்த டீஸரில் இப்படம் ஃபிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#LycaProductions #MadrasTalkies #ManiRatnam #VaanamKottattum #VikramPrabhu #Dhana #AishwaryRajesh #MadonnaSebastian #SidSriram #RaadhikaaSarathKumar #SarathKumar #VaanamKottattumteaser #VaanamKottattumFromFeb7th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;