மாதவன் படத்தில் இணைந்த ஷிவதா!

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் மாறா படத்தில் ஷிவதாவும் நடிக்கிறார்!

செய்திகள் 9-Jan-2020 7:39 PM IST Top 10 கருத்துக்கள்

’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவனும் ஷ்ரத்த ஸ்ரீநாத்தும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘கல்கி’ என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு ‘மாறா’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் தகவலை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சிறைய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் துவங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஷிவதாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகை ஷிவதாவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு செய்து உறுதி செய்துள்ளார். ‘புரொமோத் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமக்க, தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்கிறார்.

#VikramVedha #Madhavan #ShraddhaSrinath #Maara #SShivada

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;