ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து நேற்று வெளியான படம் ‘தர்பார்’. ரசிகர்களிடம் அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகரக்ளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டிக்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல நடிகர் ஒருவராவார்! அவர் ஆதித்யா மேனன். வில்லன், அண்ணன், தாதா என்று பல்வேறு படங்களில் நடித்துள்ள ஆதித்ய மேனன் சமீபத்தில் சரண் இயக்கத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. படத்தில் நடித்திருந்தார். மேடை நாடகங்களில் நடித்து வந்த ஆதித்ய மேனனை ‘ஜே.ஜே’ படத்தின் மூலம சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சரண் தான்! இதனை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ள ஆதித்ய மேனன் இப்போது தெலுங்கில் பிசியான நடிகராவார். ஒரு நடிகராக இருந்து கொண்டு முதல் முறையாக வேறு ஒரு நடிகருக்கு ஆதித்ய மேனன் குரல் கொடுத்திருப்பது ‘தர்பார்’ படத்தில் சுனில் ஷெட்டி நடித்த கேரக்டருக்குதான்!
#Darbar #Nayanthara #ARMurugadoss #LycaProductions #NivethaThomas #AdithyaMenon
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...