மூன்று ‘U/A’-க்களுக்கு பிறகு ‘U’ கிடைத்த தனுஷ் படம்!

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’ படத்திற்கு ‘U’சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 10-Jan-2020 2:41 PM IST Top 10 கருத்துக்கள்

’கொடி’ படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமாரும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பட்டாஸ்’. தனுஷின் 39-ஆவது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் சென்சார் காட்சி நடந்து முடிந்துள்ளது. ‘பட்டாஸ்’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு அனைவரும் பாரக்கக் கூடிய படத்திற்கான ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி-2’, ‘அசுரன்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய மூன்று படங்களுக்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருந்த நிலையில் இப்போது ‘பட்டாஸ்’ படத்திற்கு ‘U’சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. அதனால தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தை குடும்பத்தின் அனைவரும் வயது வித்தியாசம் இல்லாமல் பார்க்க கூடிய வாய்ப்பு அமைந்துள்ளது. ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு வாரம் கழித்து தனுஷின் ‘பட்டாஸ்’ வெளியாக இருக்கிறது.

‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுடன் மெஹ்ரின் பிரசித்தா, சினேகா, நாசர், முனீஸ்காந்த், சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளார்கள்.


#Pattas #Dhanush #DuraiSenthiKumar #Sneha #SathyaJyothiFilms #VivekMervin #OmPrakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;