‘தாராள பிரபு’வுக்கு கை கொடுத்த அனிருத்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்!

செய்திகள் 11-Jan-2020 11:53 AM IST Top 10 கருத்துக்கள்

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் இரண்டு படஙக்ளில் நடித்து வருகிறார். இதில் ஒரு படம் ‘தாராள பிரபு. இந்த படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறாது. இரண்டாவது படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீ-மேக்! இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘மான்ஸ்டர்’ படப்புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வரும் தாராள பிரபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். . ஹரீஷ் கல்யாணுடன் நிறைய குழந்தைகள் இருப்பது மாதிரி வித்தியாசமாக ரசிக்கும்படி அமைந்துள்ள ‘தாராள பிரபு’வின் ஃபர்ஸ்ட் லுக். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்க, இவர்களுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் விவேக்கும் நடிக்கிறார். ‘தாராள பிரபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கியமான கேரட்கரில் நடிக்கிறார். இந்த படத்தின் மற்ற விவரங்களின் அதிகாரர்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Harishkalyan #TanyaHope #DharalaPrabhu #ScreenScene #Selvakumarsk #

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;