மலையாள ரீ-மேக்கில் நடிக்கும் கதிர்?

மலையாள ‘இஷ்க்’  ரீ-மேக்கில் நடிக்கிறார் கதிர்!

செய்திகள் 11-Jan-2020 12:00 PM IST Top 10 கருத்துக்கள்

‘பரியேறும் பெருமாள்’, ’பிகில்’ சமீபத்தில் வெளியான ‘ஜடா’ முதலான படங்களில் நடித்த கதிர் அடுத்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இஷ்க்’ படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஷைன் நிகாம், ஆன் ஷீத்தல் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த ‘இஷ்க்’ படத்தை அனுராஜ் மனோகர் இயக்கி இருந்தார். சென்ற ஆண்டு (2019) மலையாளத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. ரொமாண்டிக் த்ரில்லர் ரக படமாக வெளியான இப்படம் ஹிந்தியிலும் ரீ-மேக்காகி வருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘இஷ்க்’ படத்தை தமிழிலும் ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள் என்றும் இந்த பத்தில் மலையாளத்தில் ஷைம் நிகாம் நடித்த கேரக்டரில் கதிர் நடிக்க இருக்கிறார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது குறித்த மற்ற தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Ishq #ShaneNigam #E4Entertainment #AnurajManohar #AnnSheetal #ShineTomChacko #LeonaLishoy #Kathir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;