கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா!

உலக கோப்பை பெற்ற கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து  உருவாகும் ‘83’ படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா!

செய்திகள் 13-Jan-2020 11:55 AM IST Top 10 கருத்துக்கள்

விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள், விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் என்று வரிசையாக பல படங்கள் உருவாகி வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாறு நிகழ்வை தழுவி எடுக்கப்பட்டு வரும் படம் ‘83’. ஹிந்தியில் உருவாகி வரும் இந்த படத்தில் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீர் சங் நடிக்கிறார். இந்த படத்தை சல்மான்கான் நடிப்பில் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தை இயக்கிய கபீர்கான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இவரது கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சுனில் கவாஸ்கராக நடிக்கும் தாஹின் ராஜின் கேரக்டர் லுக்கும் வெளியாகி உள்ளது. விறிவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் ‘83’ ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. நிஜத்திலும் கிரிக்கெட் விளையாட்டு பிரியரான ஜீவா இந்த படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்களின் பாத்திரத்தை பிரதிபலித்து நடிப்பது என வாழ்வின் வரம்’’ என்று கூறியுள்ளார்.
#RanveerSingh #83 #KabirKhan #KapilDev #Jiiva #JiivaAsKSrikkanth #RanveerSinghAsKapilDev #TahirRajBhasinAsSunilGavaskar #SaqibSaleemsMohinderAmarnath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;