சூடுப் பிடித்த ‘மாஸ்டர்’ பிசினஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்   விஜய் நடிக்கும்  ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் சூடு பிடித்தது!

செய்திகள் 13-Jan-2020 12:13 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன் ஆகியோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே விறுவிறுப்பான பயணத்தில் உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய். விஜய்சேதுபதி முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் என்று பல்வேறு சிறப்புக்களுடன் இப்படம் உருவாகி வருகிறது. அத்துடன் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் சர்வதேச விநியோக உரிமையை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன்ஸ்’ நிறுவனம் கைபற்றிய தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் தமிழகம், கேரளா, ஆந்திரா தொடங்கி வெளிநாடுகளில் மலேசியா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் என்று இப்படத்தை வெளியிடும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையிலும், படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையிலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருப்பது திரையுலகில் பெரும் ஆச்சர்யத்தையும். வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தை சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜ் பட்த்தொகுப்பு செய்கிறார்.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #VijaySethupathi #AntonyVarghesePepe #MalavikaMohanan #AndreaJeremiah #Master #VijayAsMaster #ThalapathyAsMaster #SevenScreenStudio #LalitKumar #MasterWithSevenScreenStudio #MasterDistributionRights

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;