4 நாட்களில் 150 கோடி வசூல் ! - அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஜினியின் ‘தர்பார்’ 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 14-Jan-2020 12:01 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து சென்ற 9-ஆம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வெளியான நாளிலிருந்து இப்படத்தின் வசூல் நிலவரங்கள் தொடர்பாக பலரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் ‘தர்பார்’ படத்தை தயாரித்த ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தினர் தங்களுடைய ‘தர்பார்’ திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான்கு நாட்களில் இந்த வசூலை அள்ளிய ‘தர்பார்’ தொடர்ந்து வரும் பொங்கல் விடுமுறை நாட்களில் இன்னும் நல்ல வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Rajinikanth #Darbar #LycaProductions #ARMurugadoss #Nayanthara #NivethaThomas #DarbarBoxOfficeCollection #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;