பொங்கலை கொண்டாடிய சிருஷ்டி டாங்கே!

‘கட்டில்’ படப்பிடிப்பு தளத்தில் பொங்கல் கொண்டாடிய படக்குழுவினர்!

செய்திகள் 14-Jan-2020 3:21 PM IST VRC கருத்துக்கள்

இ.வி.கணேஷ் பாபு இயக்கி வரும் படம் ‘கட்டில்’. மேப்பில் லீப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இ.வி.கணேஷ் பாபுவே கதாநாயகனாவும் நடிக்கிறார். இவருடன் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மரியாதை செய்யும் விதமாக படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மும்பை பெண்ணான சிருஷ்டி டாங்கேயுடன் கொண்டாடியது தனி சிறப்பு என்று கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான இ.வி.கணேஷ் பாபு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் ‘கட்டில்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.

#SrushtiDange #Kattil #MapleLeafProdutions #EVGaneshBabu #IndraSoundarRajan #Shyam #BLenin #Ravishankaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரு ட்ரைலர்


;