‘பாகுபலி’, ‘ சாஹோ’ வரிசையில் உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்!

‘சஹோ’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தின் தகவல்கள்…

செய்திகள் 18-Jan-2020 3:22 PM IST Top 10 கருத்துக்கள்

உலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சாஹோ’. ‘பாகுபலி’ படத்தை போலவே இப்படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வெளியானது. இந்த வரிசையில் பிரபாஸ் அடுத்து நடிக்கும் படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான கோபி கிருஷ்ணா மூவீஸ் நிறுவனமும், UV Creations நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தை தெலுங்கில் வெளியான ‘ஜில்’ என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனரான ராதாகிருஷ்ணா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபாஸுடன் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக ஹைதராபாத்திலுள அன்ன பூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட, நேற்று (17-1-2020) இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கியது. இந்த படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மற்ற அதிகார்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Prabhas #PoojaHegde #Prabhas20 #GopiKrishnaMovies #UVCreations #RebelStar #SreekarPrasad #RadhaKrishnaKumar #Jil #ManojParamahamsa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;