கீர்த்தி சுரேஷ் இடத்தைப் பிடித்த பிரியாமணி!

‘மைதான்’  ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக ஒப்பந்தமான பிரியாமணி

செய்திகள் 20-Jan-2020 2:24 PM IST Top 10 கருத்துக்கள்

கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்படும் படம் ‘மைதான்’ என்றும் இந்த படத்தில் அஜய் தேவகன் கதையின் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவலை சில மாதங்களுக்கு முன் பதிவு செய்திருந்தோம். சமீபத்தில் ‘மைதான்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக இப்போது பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக தான் கீர்த்திசுரேஷ் தன் எடையை பெருமளவில் குறைத்திருந்தார். இதனை தொடர்ந்து ‘ மைதான்’ படத்தின்ல் ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார் கீர்த்தி சுரேஷ்! ஆனால் அஜய் தேவ்கனுக்கு மனைவியாகவும், ஒரு சிறுவனுக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டிய கேரக்டர்! ஆனால் கீர்த்தி சுரேஷ் மிக இளமையாக தெரிகிறார் என்றும் அந்த கேரக்டருக்கு அவர் பொருந்தவில்லை என்றும் இயக்குனர் நினைத்ததால் இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் பரஸ்பர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு விலகியுள்ளார். அவரை தொடர்ந்து இப்போது அந்த கேரக்டரில் பிரியாமணி நடித்து வருகிறார். ‘ மைதான்’ படத்தை இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தை இயக்கிய அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்குகிறார். தமிழில் ‘நேர்கொண்ட பாரவை’ மற்றும் பல ஹிந்தி படங்களை தயாரித்த போனி கபூரும் ‘ZEE STUDIOS’ என்ற நிறுவனமும் இணைந்து ‘மைதான்’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பிரியாமணிதான் ‘அசுரன்’ தெலுங்கு ரீ-மேக்கில் தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#PriyaMani #KeerthySuresh #AjayDevgn #ZeeStudios #BoneyKapoor #Maidaan #BayviewProjectsLLP #AmitRavindernathSharma #BadhaaiHo

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

OMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்


;