நடிகை நாஞ்சில் நளினி மரணம்!

100-க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்த நடிகை நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்!

செய்திகள் 20-Jan-2020 2:49 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலையில் பிறந்தவர் நாஞ்சில் நளினி. தனது 12-வது வயதிலேயே நாடகத்தில் நடிக்க துவங்கிய நளினி தமிழ் சினிமாவில் இயக்குனர் பி.மாதவன் இயக்கிய ‘எங்க ஊர் ராஜா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த ‘அண்ணன் ஒரு கோயில்’, தீர்ப்பு’ ஆகிய படங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நாஞ்சில் நளினி. இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குட்டி பத்மினியின் மந்திர வாசல், மற்றும் ‘அச்சம் மடம் நாணம்’, ‘ பிருந்தாவனம்’, ‘சூலம்’ ஆகியவை இவர் நடித்த தொடர்களில் குறிப்பிடத்தக்கதாகும். நாஞ்சில் நளினிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. நாடகம், சினிமா, சின்னத்திரை ஆகியவற்றில் நடிகையாக திகழ்ந்த நாஞ்சில் நளினியின் மரணம் கலைத்துறைக்கு பெரும் இழப்பாகும்.
#NanjilNalini #NadigarSangam #AnnanOruKovil #Theerpu #MandhiraVaasal #AchchamMMadamNaanam #Brindhavanam #Soolam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;