கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சி!

விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கான புதிய கருவிகளை கண்டு பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கிய  சிவக்குமார், கார்த்தி!

செய்திகள் 20-Jan-2020 2:52 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் கார்த்தி சினிமாவில் நடித்து வருவதோடு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக துவங்கிய அமைப்புதான் ‘உழவன் ஃபவுண்டேஷன். இந்த உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் செய்வதற்கு புதிய கருவிகளை கண்டு பிடிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்ற ஆண்டு முதல் பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இரண்டாவது ஆண்டுக்கான விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் சிறந்து விளங்கும் ஜனகன், சிறந்த விவசாய பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு உழவன் விருதுகளும், தலா ஒரு லட்சத்திற்கான காசோலைகளும், பாராட்டு சான்றிதழ்களும் நடிகர் சிவக்குமார் கையால் வழங்கப்பட்டது. அத்துடன் சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய கருவிகளை வடிவமைப்பவருகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமாருக்கு 75,000, இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி ஆகியோருக்கு 25,000, ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு மூன்றாம் பரிசு, சிறப்பு பரிசாக புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திரபோஸுக்கு 25,000 வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தி பேசும்போது, ‘‘விவசாயிகளை கௌரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல, அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு’’ என்று பேசிய கார்த்தி, விவசாயிகள் தற்சாபு வேளாண்மையை நோக்கி நகர வேண்டிய முக்கியத்துவத்தை குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, பார்வை திறன் சவால் உள்ள விவசாயி, உற்பத்தி விலை இல்லாமல் நலிவடையும் விவசாயி, மாற்றத்திற்கான பள்ளியில் தற்சார்பு வேளாண்மையை கற்கும் மாணவர்கள் போன்றவர்களுக்கு தலா 50,000 ஊக்கத் தொகையும், நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி பொங்கலையொட்டி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;