அரவிந்த் சாமியை ‘எம்.ஜி.ஆர்.’ ஆக்கியவர் இவர்தான்!

‘தலைவி’ படத்திற்காக அரவிந்த் சாமியை எம்.ஜி.ஆர். ஆக்கியவர் ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத்!

செய்திகள் 20-Jan-2020 7:54 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படம் சம்பந்தமான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்த படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி வெளியான அந்த புகைப்படங்களில் அரவிந்த்சாமி, அச்சு அசலாக எம்.ஜி.ஆரை போலவே தோற்றம் அளித்திருந்தார். ‘தலைவி’ படத்திற்காக அரவிந்த் சாமியை எம்.ஜி.ஆராக உருவகப்படுத்திய அந்த கலைஞர் குறித்த விவரம் இப்போது கிடைத்துள்ளது. அவர் பட்டணம் ரஷீத்! ஏராளமான மலையாள படங்களில் ஒப்பனை கலைஞராக பணியாற்றியுள்ள பட்டணம் ரஷீத் ஏற்கெனவே சில தமிழ் படங்களிலும் பாணியாற்றியுள்ளார். சிறந்த ஒப்பனை கலைஞராக கேரள அரசு விருது, தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள பட்டணம் ரஷீத் கைவண்ணத்தில் தான் ‘தலைவி’ படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக தோற்றமளிக்கிறார்! சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாகவும். அரசியலில் தனி செல்வாக்கு தமிழகத்தின் முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ‘தலைவி’ படத்தின் புதிய தகவல்களுக்காக நாம் காத்திருப்போம்.

#Thalaivi #ALVijay #KanganaRanaut #GVPrakashKumar #JayalalithaBiopic #VibriMedia #ALVijay #VishnuVardhanInduri #NirovShah #ArvindSwamyAsMGR #ArvindSwamy #ThalaiviTeaser #MakeupArtistPattanamRashid

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;