அஜித்தின் ‘வலிமை’யில் ரஜினி பட ஹீரோயின்?

அஜித் நடிக்கும்  ‘வலிமை’ படத்தில் ‘காலா’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது!

செய்திகள் 21-Jan-2020 11:58 AM IST Top 10 கருத்துக்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் கதாநாயகியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் ரஜினியின் ‘காலா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஹூமா குரேஷி நடிக்க இருக்கிறார் என்றும், அதற்கான பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்தது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஹூமா குரேஷி தன் எடையை கணிசமாக குறைத்து தோற்றம் அளிக்கும் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வெளியாகி இருந்தது. இதனால் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ஹூமா குரேஷி நடிக்க இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனிகபூரே ‘வலிமை’ படத்தையும் தயாரிக்கிறார்.

#Thala #AK60 #BoneyKapoor #HVinoth #BayViewProjectsLLP #ZeeStudiosInternational #HumaSQureshi #Kaala #Valimai #NirovShah #YuvanShankarRaja #AjithKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;