மிகப் பெரிய வெற்றியை பெற்ற மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. ‘பெங்களூர் டேஸ்’ மலையாள படத்தில் இணைந்து நடித்த ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியாவும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள மலையாள படம் ‘TRANCE’ (ட்ரான்ஸ்). ‘பெங்களூர் டேஸ்’ வெளியான அதே ஆண்டிலேயே திருமணம் செய்துகொண்ட ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியாவும் அதன் பிறகு இணைந்து நடித்ததில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா ‘கூடே’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியாவும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருவரையும் ‘ட்ரான்ஸ்’ படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அன்வர் ரஷீத். ஏற்கெனவே சில வெற்றிப் படங்களை வழங்கியுள்ள அன்வர் ரஷீத் இயக்கத்தில் ஊருவாகியுள்ள படம், திருமணத்திற்கு பிறகு ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியாவும் இணைந்து நடித்துள்ள படம் என்று ‘ட்ரான்ஸ்’ மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படம் ஃபிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியாவுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#GVM #GauthamVasudevMenon #NazriyaNazim #FahadFaasil #Trance #TranceFromFeb14th #AnwarRasheed
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ‘தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி...