‘ப்ளான் பண்ணி பண்ணணும்’ படத்தில் இணைந்த பிரபல சினிமா நிறுவனம்!

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும் ‘ப்ளான் பண்ணி பண்ணணும்’ படத்தில்  மல்டிப்ளக்ஸ் பார்ட்டனராக இணைந்த  ‘PVR சினிமாஸ்’

செய்திகள் 21-Jan-2020 7:45 PM IST Top 10 கருத்துக்கள்

அதர்வாவை வைத்து ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ். இவர் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கு சமீபத்தில் ‘ பளான் பண்ணி பண்ணணும்’ என்று டைட்டில் வைக்கப்பட்டு அதனை அதிகார்பூர்வமாக அறிவித்திருந்தனர். ட்ராவல் ஸ்டோரியாக உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் மல்டிப்ளக்ஸ் பார்ட்னராக பிரபல PVR சினிமாஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘POSITIVE PRINT STUDIOS’ நிறுவனம் சார்பில் ராஜேஷ் குமார், சிந்தன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;