ராஜமௌலியின் ‘RRR’ படப்பிடிப்பில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

ராஜமௌலி இயக்கும் ‘RRR’ படத்தின் படப்பிடிப்பில்  இணைந்த பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன்!

செய்திகள் 22-Jan-2020 4:03 PM IST Top 10 கருத்துக்கள்

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் புனேயில் துவங்க இருந்த நிலையில் ராம் சரண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட, படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடந்து சமீபத்தில் ‘RRR’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (21-1-2020) முதல் இந்த படப்பிடிப்பில் அஜய் தேவ்கனும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இது குறித்த தகவலை ‘RRR’ படக்குழுவினர் அஜய் தேவ்கனும், இயக்குனர் ராஜமௌலியும் இருக்கும் ஒரு புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் இதுவென்பதால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

#RRR #Rajamouli #CharanTeja #JrNTR #Samuthirakani #AliaBhatt #AjayDevgn #DaisyEdgarJones #AjayDevgnStartedShootingForRRR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;