நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் நடிக்கும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்?

பிரபல நடன இயக்குனரான பிருந்தா இயக்குனராக அவதாரம் எடுக்கும் படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கிறார்கள்!

செய்திகள் 23-Jan-2020 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனராக விளங்கி வருபவர் பிருந்தா. இவர் ஒரு படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிருந்தா இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. பிருந்தா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துல்கர் சல்மான் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்கும் என்றும் தகவல் ஏற்கெனவே சில மலையாள மீடியாக்களில் வெளியாகி இருந்தது. இப்போது மீண்டும் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ‘ வாயை மூடி பேசவும்’, ‘ஓக்கே கண்மணி’ ஆகிய படங்களை தொடந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’, ‘வான்’ ஆகிய தமிழ் படங்களை கையில் வைத்திருக்கும் துல்கர் சல்மான், பிருந்தா இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறதாம்! இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#DanceChoreographer #Brindha #DulquerSalman #KajalAggarwal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;