ரஜினி பட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

‘லிங்கா’  படம் சம்பந்தமான  வழக்கில் நீதிமணம்  தீர்ப்பு அளித்தது!

செய்திகள் 23-Jan-2020 1:15 PM IST Top 10 கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ என்ற கதை என்றும், எனது கதையை திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர் என்றும், அதனால் ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் ‘ராக்லைன்’ வெங்கடேஷ். இதனை தொடர்ந்து மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. 10 கோடி ரூபாயை காப்பு தொகையாக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு ‘லிங்கா’ படத்தை வெளியிடலாம் என்று அப்போது உயநீதிமன்ற மதுரை கிளை உத்தர்விட்டது. இதனை தொடர்ந்து படம் வெளியானது. இதனை தொடர்ந்து நடந்து வந்த இவ்வழக்கின் தீர்ப்பு இப்போது ‘லிங்கா’ தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷுக்கு சாதகமாக வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘ராக்லைன்’ வெங்கடேஷ், ‘‘எங்கள் ‘லிங்கா’ படத்தில் இடம் பெறும், ‘உண்மை ஒரு நாள் வெல்லும்… இந்த உலகம உன் பேர் சொல்லும்’ பாடல் வரிகளை போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;