ரன்வீர் ச்ங்கின் ‘83’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்!

ரன்வீர் சிங் நடிக்கும் ‘83’ படத்தை தமிழில் கமல்ஹாசனும் சஷிகாந்தும் இணைந்து வெளியிடுகிறனர்!

செய்திகள் 25-Jan-2020 12:22 PM IST Top 10 கருத்துக்கள்

1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாறு நிகழ்வை தழுவி எடுக்கப்பட்டு வரும் படம் ‘83’. ஹிந்தியில் உருவாகி வரும் இந்த படத்தில் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீர் சங் நடிக்கிறார். இந்த படத்தை சல்மான்கான் நடிப்பில் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தை இயக்கிய கபீர்கான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படம் ஹிந்தி தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறாது.

இந்நிலையில் இந்த படத்தில் கம்ல்ஹாசனும் இணைந்துள்ளார். தமிழ் ‘83’ படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனமும் சஷிகாத்நின் ஒய் நாட் ஸ்டுடியோஸும் இணைந்து வெளியிட உள்ளது. இது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், ‘83’ படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றிப் பக்கங்களில் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் பெருமை கொள்கிறேன்‘‘ என்று கூறி உள்ளார். சஷி காந்த் இப்படத்தை தமிழில் வெளியிடுவது குறித்து பேசுகையில், ‘உலக நாயகன் கமல்ஹாசனும் இப்படத்தில் இணைந்திருப்பதன் மூலம் இப்படம் மேலும் கவனம் பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

#RanveerSingh #83 #KabirKhan #KapilDev #Jiiva #JiivaAsKSrikkanth #RanveerSinghAsKapilDev #TahirRajBhasinAsSunilGavaskar #SaqibSaleemsMohinderAmarnath #RKFI #YNOTStudios #YNOTXMarketing&Distribution #RelianceEntertainment #83InTamil #KamalHaasan #Sashikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;