‘மீண்டும் ஒரு மரியாதை’யுடன் வரும் பாரதிராஜா!

பாரதிராஜா இயக்கத்தி நடித்திருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ ஃபிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 25-Jan-2020 12:24 PM IST Top 10 கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘அன்னக்கொடி’. 2013-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா சத்தமில்லாமல் படத்தை இயக்கி, நடித்துள்ள படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. பாரதிராஜாவின் ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு முதலில் ‘ ஓம்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

எத்தனை பெரிய சோதனை வந்தாலும் அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் படமாகவும் இருக்குமாம்! அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும். ஒரு இளம் பெண்ணும் தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும்போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு போராடி வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை உணர்வு பூர்வமான காட்சிகளுடன் பாரதிராஜா படமாக்கியுள்ளார். இந்த படத்தில் பாரதிராஜாவுடன் ராசி நக்‌ஷஷ்த்ரா நடித்துள்ளார். முக்கிய வேடமொன்றில் மௌனிகா பாலுமகேந்திரா நடிக்க, ஜோ மல்லூரியும் ஒரு கேரக்டரில் நடித்துள்ள்ளார்.

இந்த படத்திற்கு சாலை சஹாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எம்.கே.பழனிவேல் படத்தொகுப்பு செய்துள்ளார். மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். சபேஷ்- முரளி பின்னணி இசை அமைக்க, பாடல்களுக்கு ரகுந்தன் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஃபிப்ரவரி 21-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.

#Bharathiraja #MeendumOruMariyaadhai #ManojCreations #RasiNakshathra #MounikaBaluMahendra #JoMalluri #MadhanKarky #SaaalaiSahadevan #KMKPazhanivel #SabeshMurali #Raghunthan #Annakodi #MeendumOruMariyaadhaiFromFeb21st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;