மும்பையில் ‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’

லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது!

செய்திகள் 25-Jan-2020 12:57 PM IST Top 10 கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்‌ஷமண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம் ‘பூமி’. ‘ஜெயம்’ ரவியின் 25-ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ‘அடங்கமறு’ படத்தை தயாரித்த ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் ‘பூமி’யில் ‘ஜெயம்’ ரவியுடன் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் சரண்யா ரோனித் ராய், தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ் ஆகியோரும் நடித்து வருகிறாகள். விறுவிறுப்பாக படமாகி வந்த பூமியின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை மே மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு ‘ஜெயம்’ ரவி, மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைய உள்ளார்.
#JayamRavi #Bhoomi #BhoomiShootingInMumbai #DImman #Bogan #Lakshman #SujathaVijaykumar #HomeMovieMakers #NidhhiAgerwal #Dudley #John #Durairaj #StuntSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;