விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு குடியரசு தின ட்ரீட் அளித்த ‘மாஸ்டர்’

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது போஸ்டர்!

செய்திகள் 27-Jan-2020 11:54 AM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ‘மாநகரம்’. ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் லுக்கை பொங்கல் விருந்தாக வெளியிடப்பட்டது. இந்த இரண்டு போஸ்டர்களிலும் விஜய் மட்டும் தான் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது லுக்கிலாவது விஜய் சேதுபதி இடம் பெறுவார் என்று எதிர்பார்த்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் அன்று வெளியான ‘மாஸ்டர்’ போஸ்டர் ஏமாற்றம் அளித்தது. ஆனால் அந்த குறையை குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மாஸ்டர்’ படக்குழுவினர் நிவர்த்தி செய்துள்ளனர். ‘மாஸ்டர்’ படத்த்ன் மூன்றாம் லுக்கை குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். இந்த மூன்றாம் லுக் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்ளுக்கு குடியரசு தின ட்ரீட்டாக அமைந்தது.

இந்த மூன்றாம் லுக்கில் விஜய்யும், விஜய் சேதுபதியும் முகத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட இருவரும் நேருக்கு நேர் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு மோதிக்கொள்வது மாதிரி இடம் பெற்றுள்ளது. இந்த லுக் இப்போது சமுகவலைதளங்களில் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் இந்த மூன்றாம் லுக், இதற்கு முன் வெளியான சில படங்களின் போஸ்டர்களை நினைவுப்படுத்துவது மாதிரி அமைந்துள்ளது என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.

சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்து வருகிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #VijaySethupathi #AntonyVarghesePepe #MalavikaMohanan #AndreaJeremiah #Master #VijayAsMaster #ThalapathyAsMaster #SevenScreenStudio

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;