‘த்ரிஷா-60’ படத்தை கைபற்றிய பிரபலம்!

‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார்!

செய்திகள் 27-Jan-2020 12:55 PM IST Top 10 கருத்துக்கள்

திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. த்ரிஷா முதன் முறையாக ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் மிக விரைவில் ரிலீசாக இருக்கிறது. த்ரிஷாவின் 60-ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு 200 வருடங்களுக்கும் மேல் பழமையான ஆற்காடு கோட்டையில் நடந்துள்ளது. அரசியல் கலந்த திகில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரு இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்ட், நந்தா. ஏ.எல்.அழகப்பன், வேலா ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வரும் இப்படத்தை ‘அபிராமி’ ராமநாதன் தன் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துப் போகவே, இப்படத்தின் சென்னை சிட்டி விநியோக உரிமையை வாங்கியுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘24HRS’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசை அமைத்துள்ளார்

#Trisha #AbiramaiRamanathan #Nandha #24HRSProductions #Thirugnanam #Trisha60 #ParamapadhamVilayattu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;