‘பொன்னியின் செல்வன்’ குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!

பொன்னியின் செல்வன்  குறித்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசை அமைப்பாளர் ஏ.அர்.ரஹ்மான் வெளியிட்ட  தகவல்!

செய்திகள் 27-Jan-2020 4:06 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்துள்ள அந்த தகவலில், ‘பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்களை சென்ற வாரம் ரவி வர்மன் என்னிடம் காட்டினார். எல்லாமே சூப்பராக இருந்தது…’’ என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதில்லை. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள இத்தகவல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

‘லைகா புரொடக்‌ஷன்’ஸும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் திரைக்கதையை மணிரத்னமும், குமரவேலும் எழுத, ஜெயமோகன் வசனங்கள் எழுதுகிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை தோட்டாதரணியும், வாசிக் கானும் இணைந்து கவனிக்கிறார்கள். சண்டை பயிற்சியை ஷாம் கௌஷல் அளிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கவனிக்கிறார். நடனங்களை பிருந்தா அமைக்கிறார்.

#PonniyinSelvan #Karthi #ManiRatnam #Vikram #JayamRavi #AishwaryaRaiBachcham #AishwaryaLekshmi #Lal #LycaProductions #MadrasTalkies #RaviVarman #SreekarPrasad #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;