‘மிஸ் இந்தியா’ ஹைதராபாத் ஷெட்யூலை முடித்த கீர்த்தி சுரேஷ்!

நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகும் ‘மிஸ் இந்தியா’ படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு!

செய்திகள் 28-Jan-2020 3:46 PM IST Chandru கருத்துக்கள்

‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த வாயப்புத் தவறியது. இருந்தபோதும், தென்னிந்தியாவில் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் ரஜினியுடன் முதல்முறையாக இணைந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மகேஷ் கோனெருவின் ‘ஈஸ்ட் கோஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘பட்டாஸ்’ வில்லன் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விரைவில் இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு துவுங்க உள்ளது.

#KeerthySuresh ##Keerthy20 #MissIndia #SSThaman #Narendranath #KarthikSubbaraj #Penguin #StoneBenchCreations #PassionStudios #EashvarKarthic #KharthickPalani #AnilKrish #SanthoshNarayanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;