காதலர் தினத்துக்கு தள்ளி வைத்த சந்தானம் படம்!

இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் ஃபிப்ரவரி 14-ஆம் தேதிக்கு  தள்ளிவைக்கப்பட்டது!

செய்திகள் 29-Jan-2020 11:16 AM IST Top 10 கருத்துக்கள்

இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி, அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் அப்படங்களின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களின் விளம்பர, புரொமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் அது வசூலை பெரும் அளவில் பாதிக்கும் என்பதோடு இது திரையுலகிற்கு நல்லதும் கிடையாது என்பதால் இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ஃபெப்சி’ சிவா, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோர் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார், ‘டகால்டி’ படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் ‘டகால்டி’ படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்வது என்றும், ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸை ஃபிப்ரவரி 14-ஆம் தேதிக்கு மாற்றி வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால், இந்த வாரம் சந்தானம் நடித்த ‘டகால்டி’ படம் மட்டுமே ரிலீசாகிறது. ‘சர்வர் சுந்தரம்’ காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. இதனை அவர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவித்தனர்.

#ServerSundaram #Santhanam #VaibhaviShandiyala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;