‘பிகில்’ படைத்த சாதனை - அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்!

நூறாவது நாளை எட்டிய விஜய்யின் ‘பிகில்’ – அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்!

செய்திகள் 30-Jan-2020 1:06 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா உள்ளிட்டவர்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்து நல்ல வசூலை அள்ளிய இப்படம் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்த படம் இந்த வாரத்துடன் 100 நாட்களை நிறைவு செய்ய உள்ளது. இது குறித்து ‘பிகில்’ படத்தின் கிரியேட்டீவ் புரொட்யூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில்’ படம் குறித்து பதிவிட்டுள்ளதில், ‘‘பிகில் படம் இந்த வாரத்துடன் 100 நாட்கள் நிறைவு செய்ய உள்ளது. உலகம் முழுக்க உள்ள விஜய் ரசிகர்கள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்காது. இந்த வருடத்தின் மிகப் பெரிய வசூல் ரெக்கார்ட் பிரேக் படம் ‘பிகில்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் என்பது நிச்சயம்!

‘பிகில்’ படத்தை தொடந்து விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருக்கிறது. ‘பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#ArchanaKalpathi #Bigil #Bigil100thDay #ARRahman #Atlee #AGSEntertainment #AGSCinemas #Vijay #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;