‘ராம்’ படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா ட்வீட்!

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் RAM படத்தில் நடிக்கும் த்ரிஷா

செய்திகள் 30-Jan-2020 6:52 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தம்பி’. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜித்து ஜோசஃப் இயக்கி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப் இயக்கும் படம் RAM (ராம்) என்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் மோகன் லால், த்ரிஷா இணைந்து நடிக்கிறார்கள் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். மோகன்லாலுடன் த்ரிஷா முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5- தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜித்து ஜோசஃப், நடிகர் மோகன்லாலுடன் த்ரிஷா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘‘கூலா’ன அனுபவம்! இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஜித்து ஜோசஃப், சாதனையாளர் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்ற நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்…’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே நிவின் பாலியுடன் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் நடித்த த்ரிஷா நடிக்கும் இரண்டாவது மலையாள படமாகும் ‘RAM’ . இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது.

#Trisha #Mohanlal #Superstar #JeethuJoseph #RAM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;