விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தின் ரிலீஸ் தேதி!

விஷ்ணுவர்த்தன் இயக்கும் ஹிந்தி படமான  ‘SHERSHAAH’ ஜூலை 3-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 30-Jan-2020 6:55 PM IST VRC கருத்துக்கள்

‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘யட்சன்’. 2015-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் விஷ்ணுவர்த்தன் தனது அடுத்த படமாக ஹிந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு ‘SHERSHAAH’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். அத்துடன் இப்படம் கார்கில் போர் வீரர் விக்ரம் பத்ரா பற்றிய கதையாக உருவாகிறது என்ற தகவலையும் பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த படத்தை வருகிற ஜூல மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோஹர் மற்றும் சில தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக கைரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கார்கில் போர் நடந்த நிஜ சண்டிகர், பலம்பூர் பகுதிகளில் நடந்துள்ளது. விஷ்ணுவர்த்தன் இயக்கும் முதல் ஹிந்தி படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படம் பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

#Shershaah #SidharthMalhotra #KiaraAdvani #KaranJohar #DharmaProductions #Vishnuvardhan #CaptainVikramBatra #KargilWar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 ஸ்டேட்ஸ் ஹிந்தி படடிரைலர்


;