பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்!

பிரபல குணச்சித்திர நடிகரும் இசை அமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்!

செய்திகள் 30-Jan-2020 7:32 PM IST VRC கருத்துக்கள்

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்தவர் டி.எஸ்.ராகவேந்திரா. இந்த படத்தின் மூலம் பிரபலமான டி.எஸ்.ராகவேந்திர தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிந்து பைரவி, சின்னத் தம்பி பெரிய தம்பி, விக்ரம், நீ வருவாய் என உட்பட பல படங்களில் நடித்து சினிமா ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டி.எஸ்.ராகவேந்திரா காலமானார் என்ற அதிகார்பூர்வ செய்தியை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் அவரது இறுதி சடங்குகள் சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் மத்தியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது என்ற தகவலும் பதிவாகியுள்ளது.

நடிகர் என்று மட்டும் இல்லாமல் யாகசாலை, உயிர், படிக்காத பாடம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைக்கவும் செய்துள்ள டி.எஸ்.ராகவேந்திராவின் இழப்பு சினிமா உலகிற்கு பெரும் இழப்பாகும்.

#TSRaghavendra #VaidehiKathirunthal #SindhuBhairavi #Vikram #ChinnaThambiPeriyaThambi #NeeVaruvaiEna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;