மாயநதி – விமர்சனம்

படிக்கிற காலத்தில் அதில் மட்டுமே கவனத்தை செலுத்துங்கள் என்று சொல்ல வந்துள்ள படம்!

விமர்சனம் 31-Jan-2020 1:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Asok Thiyagarajan
Production: Raji Nila Mukhil Films
Cast: Abi Saravanan, Venba, Aadukalam Naren, Appukkutty
Music: Raja Bavatharini
Cinematography: Sreenivas Devamsam
Editor: Gopi Krishnaஅறிமுகம் அசோக் தியாகராஜன் தயாரித்து இயக்க, அபி சரவணன், வெண்பா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாயநதி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

‘ஆடுகளம்’ நரேனின் ஒரெ மகள் வெண்பா! ப்ளஸ் டூ படிக்கிறார்! அம்மா இல்லாமல் வளர்ந்த வெண்பாவை டாக்டராக்க வேண்டும் என்பது ஆடுகளம் நரேன் ஆசை! டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருக்கும் வெண்பாவும் அதற்கேற்ற மாதிரி வகுப்பில் எப்போதும் முதல் மாணவியாக வரும் விதமாக படிக்கிறார். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் வெண்பாவுக்கு, ஒரு ‘ஆசிட் வீச்சு’ சம்பவம் மூலம் ஆட்டோ ஓட்டும் அபி சரவணன் மீது காதல் வருகிறது. அபி சரவணஞ்ம் வெண்பாவை விரும்ப, நாளடைவில் இவர்களது காதல் தீவிரமாகிறது. இதனால் வெண்பா படிப்பில் கவனத்தை இழக்கிறார். இந்நிலையில் நிறைய காதல் தோல்விகளை சந்தித்த அபிசரவணன் வெண்பாவை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்! இந்நிலையில் வெண்பாவின் டாக்டர் கனவு நிறைவேறியதா? அபிசரவணனும், வெண்பாவும் திருமணம் செய்து கொண்டார்களா? என்பதற்கான விடைகளே மாயநதி!

படம் பற்றிய அலசல்

மாணவிகள் படிக்கிற காலத்தில் கவனத்தை சிதறவிட்டால், அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும், லட்சியத்தில் உருதியாக இருந்து செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம், பிள்ளைகள் மீது நம்பிகை வைத்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு ஆகிய கருத்துகக்ளை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் அசோக் தியாகராஜன். ஆனால் கதையில் எந்த ட்விஸ்டுகளும், விறுவிறுப்பும் இல்லாததாலும், அடுத்து என்ன நடக்கும் என்பதை படம் பார்ப்பவர்களால் எளிதில் யூகிக்க கூடிய விதமாகவும் அமைந்திருப்பதால் ‘மாயநதி’ சொல்லும்படியான சுவாரஸ்யத்தை தரவில்லை. படிக்கிற மாணவ மாணவிகளுக்கு நல்ல கருத்துக்களை கூறும் விதமாக இப்படத்தை இயக்கிய அசோக் தியாகராஜன், கதையில் ஒரு சில திருப்பங்களை உருவாக்கி காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக்கி படமாக்கி இருந்தால் ‘மாயநதி’ கவனம் பெற்றிருக்கும். இந்த படத்திற்கு பலமாக அமைந்துள்ள விஷயங்கள் என்னவென்றால் யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அப்படியே படமாக்கப்பட்டிருப்பது, அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு, அதில் அவர்களது யதார்த்த நடிப்பு, கதைக்கு தேவையான பங்களிப்பு செய்திருக்கும் ராஜா பவதாரணியின் இசை, ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்களை சொல்லலா. படத்தொகுப்பு செய்துள்ள கோபி கிருஷ்ணா படத்தின் முதல் பாதியில் வரும் சில காட்சிகளை இன்னும் ஷார்ப் ஆக்கி இருக்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக வரும் அபிசரவணன், கதாநாயகியாக வரும் வெண்பா, வெண்பாவின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அபி சரவணனின் நண்பராக வரும் அப்புக்குட்டி ஆகியோர் தங்களது கேக்டர்களுக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபிசரவணனின் அப்பாவாக வருபவர், வெண்பா மீது ஆசிட் வீச வரும் மாணவனாக நடித்திருப்பவர், வெண்பாவின் பள்ளி ஆசிரியையாக வருப்வர், தோழியாக வருபவர் என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள்..

2.அபிசரவணன், ஆடுகளம் நரேன், வெண்பா

பலவீனம்

1.கதையில் எந்த ட்விஸ்டுகளும், விறுவிறுப்பும் இல்லாதது..

2. யூகிக்க கூடிய விதமாகவே பயணிக்கும் கதை அமைப்பு!

மொத்தத்தில்…

நன்றாக படிக்கக் கூடிய ஒரு மாணவி, இளம் வயதில் வரும் ‘காதல்’ உணர்வால் எப்படி பாதிக்கப்படுகிறார், தனது லட்சியத்தை அடைய அந்த மாணவி என்னவெல்லாம் செய்கிறார் என்ற விஷயங்களை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!

ஒருவரி பஞ்ச் : படிக்கிற காலத்தில் அதில் மட்டுமே கவனத்தை செலுத்துங்கள் என்று சொல்ல வந்துள்ள படம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பள்ளிப் பருவத்திலே - டிரைலர்


;