டகால்டி – விமர்சனம்

சும்மா,  பொழுதைப் போக்க மட்டும்!

விமர்சனம் 1-Feb-2020 4:46 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Vijay Anand
Production: ‘Handmade Films’ & ‘18 Reels’
Cast: Santhanam, Rittika Sen, Yogi Babu, Radha Ravi & Tarun Arora
Music: Vijay Narain
Cinematography: Deepak Kumar Pathy
Editor: TS Suresh


இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், ராதாரவி, யோகி பாபு, தருண் அரோரா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டகால்டி’ சந்தானத்தின் ‘டிரேட் மார்க்’ படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

மும்பையில் சின்ன சின்ன திருட்டுக்களை செய்து பிழைப்பு நடத்தி வருபவர் சந்தானம். இந்நிலையில் மும்பையில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் தருண் அரோரா தன் மனதில் தோன்றும் பெண் உருவத்தை வரைந்து, அந்த உருவ அமைப்பைக் கொண்ட பெண் எங்கு இருந்தாலும் கொண்டு வர சொல்லி ஊரில் இருக்கும் ரௌடிகளுக்கு உத்தரவிடுவார். அந்த பெண்ணை கண்டு பிடித்து கொண்டு வரும் பொறுப்பு மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் ராதாரவியிடமும் வருகிறது. அப்போது ஒரு பிரச்சனையில் ராதாரவியிடம் மாட்டிக்கொண்ட சந்தானத்தை, ராதாரவி கொலை செய்து விட முடிவெடுக்கும் நிலையில், ராதாரவியிடமிருந்து தப்பிக்க சந்தானம், ராதாரவி கண்டு பிடிக்க வேண்டிய அந்த பெண் இருக்கும் இடம் எனக்கு தெரியும் என்று கூறுகிறார். இதை நம்பும் ராதாரவி அந்தப் பெண்ணை கொண்டு வந்தால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன், அத்துடன் பத்து லட்சம் பணமும் தருகிறேன் என்று கூற, சந்தானம் தெரியாத அந்த பெண்ணை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டகால்டி’யின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் இயக்கும் படம், சந்தானம் நடிக்கும் படம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘டகால்டி’ அந்த ஏதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்! சந்தானம், ‘யோகி’ பாபு சம்பந்தப்பட்ட சில காமெடி காட்சிகள், இரண்டு பாடல்கள் தவிர படத்தில் ரசிக்க கூடிய எந்த விஷயங்களும் இல்லை. தருண் அரோரா வரையும் உருவ அமைப்பை கொண்ட பெண்ணாக வரும் ரித்திகா சென் திருச்செந்ந்தூரில் இருப்பதை அறிந்து, சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அவருக்கு பாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சந்தானம் ஏமாற்றி மும்பைக்கு அழைத்து வருவது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரித்திகா சென் தப்பிக்க முயற்சிப்பது, பிறகு அவள் மீது இறக்கம் கொண்டு அவளை மீட்க சந்தானம் மேற்கொள்ளும் போராட்டங்கள் என்று பயணிக்கும் படத்தில் லாஜிக் என்ற ஒரு விஷயமே இல்லை! காமெடிக்காக எடுக்கப்படுகிற படம் என்றாலும் இப்படியா என்ற கேள்விகளுடன் தேவையில்லாத சில கேரக்டர்களுடன் பயணிக்கும் இந்த படத்தில் இயக்குனர் விஜய் ஆனந்த், சந்தானம் அமைத்த கூட்டணி பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

சந்தானம் தனக்கு தரப்பட்ட கேரக்டரை தனது பாணியில் ரசிக்க வைத்துள்ளார். சந்தானத்தின் நண்பராக வரும் யோகி பாபுவும் தனது பாணியில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்த முதல் படம் என்று சொல்லும் அளவிற்கு இவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. கதையின் நாயகியாக வரும் அறிமுகம் ரித்திகா சென், நம் நேட்டிவிட்டிக்கு தகுந்த முக தோற்றத்துடன் சிறந்த நடிப்பையும் வழங்கி கவனம் பெறுகிறார்! பெரிய தாதாவாக வரும் ராதாரவி, பெரும் பண வசந்தி படைத்த வில்லனாக வரும் தருண் அரோரா ஆகியோரது பங்களிப்பும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

பலம்

1.சந்தானத்தின் காமெடி

2.பாடல்கள்

பலவீனம்

1.கதை அமைப்பு

2.கதையுடன் ஒட்டாமல் பயணிக்கும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

தில்லுக்கு துட்டு, A1 போன்ற படங்களை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் சந்தானத்தின் அக்மார்க் படமாக அமையவில்லை என்றாலும், சும்மா, பொழுதை கழிக்க ஒரு முறை பார்க்கலாம்!

ஒருவரி பஞ்ச் : சும்மா, பொழுதைப் போக்க மட்டும்!

ரேட்டிங் : 4/10

#Dagaalty #Santhanam #DirectorVijayAnand #RittikaSen #SanthanaBharathi #Radharavi #Rekha #Manobala #HemanthPandey #StuntSilva #VijayNarain #MadhanKarky #18Reels #HandmadeFilms #DagaaltyMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;